Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரஷ்யாவில் நிலநடுக்கம்.. இந்தியாவிற்கு சுனாமி ஆபத்து இல்லை: இந்திய தேசிய அறிவியல் மையம் அறிவிப்பு..!!

டெல்லி: பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்கா முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து இல்லை என்று பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் அச்சம் அடைந்தனர்.

சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடலோர பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. ஹவாய், சாலமன் தீவு, ஜப்பான் உள்ளிட்ட இடங்களில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அமெரிக்காவில் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை குறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்காணித்து வருகிறது. அமெரிக்க அவசரநிலை மேலாண்மை மையத்தின் எச்சரிக்கைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தின் +1-415-483-6629 என்ற உதவி எண்ணை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் நம் நாட்டுக்கும் சுனாமி பாதிப்பு வருமா? என்ற பீதி ஏற்பட்டது. ஆனால் நம் நாட்டுக்கு எந்த சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) தனது எக்ஸ் பதிவில்; இந்த நிலநடுக்கம் தொடர்பாக இந்தியாவிற்கும் இந்திய பெருங்கடலுக்கும் எந்த சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.