இஸ்ரேல் துறைமுகங்களுடன் தொடர்பு வைத்துள்ள நிறுவனங்களுக்குச் சொந்தமான கப்பல்களையும் தாக்குவோம்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல்
ஜெருசலேம்: இஸ்ரேல் துறைமுகங்களுடன் தொடர்பு வைத்துள்ள நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்து கப்பல்களையும் தாக்குவோம் என்று ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் ஹவுதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள வீடியோவில்;
இஸ்ரேல் துறைமுகங்களுடன் தொடர்பு வைத்துள்ள நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்து கப்பல்களையும் தாக்குவோம். கப்பல்கள் தாக்கப்படாமல் இருக்க வேண்டுமெனில், காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்திக் கொண்டால், உடனடியாக தங்கள் நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாகவும். என அவர் தெரிவித்துள்ளார்.