Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்..!!

மும்பை: மஹாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் இருபது ஆண்டு பகையை மறந்து மும்மொழி கொள்கைக்கு எதிராக இன்று (ஜூலை 05) ஹிந்தி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றனர். ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் படி மஹாராஷ்டிரா பா.ஜ., மகாயுதி அரசு 1ம் வகுப்பு முதல் பள்ளிகளில் ஹிந்தியை மூன்றாம் மொழியாக மாற்றியது இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மாநில அரசு பின் வாங்கியது. எனினும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள எண்ணிய உத்தவ், ராஜ் தாக்கரே இருவரும் இன்று பேரணி நடத்தினர். மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் இருவரும் பங்கேற்றனர்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இந்த நிகழ்வில் பேசிய ராஜ் தாக்கரே பேசியதாவது; "பால் தாக்கரே செய்ய முடியாததை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்துள்ளார். எங்கள் இருவரையும் மீண்டும் இணைத்துள்ளார். மகாராஷ்டிரத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். எங்களது வலுவான இணைப்பினால் பாஜக அரசு ஹிந்தி திணிப்பை வாபஸ் பெற்றுள்ளது. ஹிந்தி வெறும் 200 ஆண்டு கால வரலாறு கொண்ட மொழி. ஹிந்தி பேசும் மாநிலங்களைவிட ஹிந்தி பேசாத மாநிலங்கள் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன. அப்படியெனில் 3-வது மொழிக்கு என்ன தேவை இருக்கிறது? ஹிந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" என்று கூறினார்.

உத்தவ் தாக்கரே பேசுகையில், "நாங்கள் இருவரும் இனி ஒன்றாக இருக்கவே தற்போது சேர்ந்துள்ளோம். நாங்கள் இப்போது சேர்ந்துள்ளது டிரைலர்தான், ஆரம்பம்தான். இந்து, இந்துஸ்தானை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஹிந்தியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எங்களுக்கு இந்து மதத்தை நீங்கள்(பாஜக) கற்றுக்கொடுக்க வேண்டாம்" என்று பேசினார்.