Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ரூ. 2.38 கோடி மதிப்பீட்டில் பாரா பாட்மிட்டன் மைதானம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (29.7.2025) சென்னை, கீழ்பாக்கம் நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாரா பாட்மிட்டன் மைதானம் அமைக்கப்பட்டு வரும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பாரா-விளையாட்டுகளை (Para Sports) ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் சென்னையில் நேரு பூங்கா விளையாட்டு வளாகத்திலும் மற்றும் திருச்சி, மதுரை, கடலூர் திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய 6 மாவட்ட விளையாட்டரங்கங்களில் மொத்தம் 7.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் நேரு பூங்கா வளாகத்தில் 2.38 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், இதர 5 மாவட்டங்களில் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் தலா 1.00 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 7.38 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பாரா-விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தைப் பொறுத்தவரை பாரா-விளையாட்டு மைதானமானது அரைவட்ட திறந்தவெளி மேற்கூரை கொண்ட பாரா இறகுப்பந்து ஆடுகளம். உட்கார்ந்து விளையாடும் பாரா கையுந்துபந்து ஆடுகளம், பாரா டேபிள் டென்னிஸ் ஆடுகளம். பாரா போச்சியா (Boccia) ஆடுகளம், பாரா டேக்வொண்டோ ஆடுகளம். பாரா ஜூடோ ஆடுகளம். பாரா கோல்பால் (Goal ball) ஆடுகளம், பாரா பளுதூக்குதல் பகுதி ஆகிய வசதிகளுடன், நிர்வாக அலுவலக கட்டடம் உபகரணங்கள் வைக்கும் அறை. சக்கர

நாற்காலிகளுடன் அணுகும் வகையிலான சாய்வு தளம் கொண்ட ஆண், பெண் இருபாலருக்கான கழிப்பறைகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.அதே போன்று, திருச்சி. மதுரை. கடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் வரும் பாரா-விளையாட்டு மைதானம் அரைவட்ட திறந்தவெளி மேற்கூரை கொண்ட உட்கார்ந்து விளையாடும் பாரா கையுந்துபந்து ஆடுகளம், பாரா போச்சியா (Boccia) ஆடுகளம், பாரா கோல்பால் (Goal ball) ஆடுகளம், பாரா பந்து எறிதல் ஆடுகளம் ஆகிய வசதிகளுடன், நிர்வாக அலுவலக கட்டடம். உபகரணங்கள் வைக்கும் அறை, சக்கர நாற்காலிகளுடன் அணுகும் வகையிலான சாய்வு தளம் கொண்ட ஆண், பெண் இருபாலருக்கான கழிப்பறைகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு துணை இன்றைய தினம் மாண்புமிகு முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை. கீழ்பாக்கம் நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் 2.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாரா பாட்மிட்டன் மைதானம் அமைக்கப்பட்டு வரும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிலும் செய்து முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அலுவலர்களுக்கு அறிவுருத்தினார்.

இந்த ஆய்வின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.