2 ஆயிரம் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!
சென்னை: இணையம் சார்ந்த உணவு டெலிவரி ஊழியர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இதற்காக நலவாரியம் அமைத்து அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்துவருகிறது.
இந்நிலையில் கடந்த பட்ஜெட்டில் இது தொடர்பான 2 முக்கிய அறிவிப்புகள் வழங்கப்பட்டது. அதன்படி இணையம் சார்ந்த ஊழியர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அரசாணை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு திட்டத்துக்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2000 உணவு டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.