சென்னை: நாம் காண விரும்பும் சமநிலைச் சமுதாயம் அமைந்தே தீரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டஸ்டலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
பள்ளியில் இரட்டைப் பானை முறை எதிர்ப்பு தொடங்கி, தான் பணியாற்றிய இராணுவம் வரை பாகுபாடு எங்கு காட்டப்பட்டாலும் அங்கெல்லாம் வெகுண்டெழுந்து அதனை உடைத்த புரட்சியாளர் பெரியவர் இளையபெருமாள் அவர்கள்!
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், அனைத்துச் சாதி அர்ச்சகர் சட்டம் எனப் பலவற்றிலும் ஐயா இளையபெருமாள் கமிட்டி அளித்த அறிக்கையின் பங்கு இருக்கிறது.
ஒடுக்கப்பட்டோரின் சமூக விடுதலைக்கான பெரும் போராட்டங்களை அவர் முன்னெடுத்த சிதம்பரம் மண்ணில், அவருக்கு நூற்றாண்டு நினைவரங்கம் திறந்து வைத்து, நமது திராவிட மாடல் அரசின் நன்றிக்கடனைச் செலுத்தினேன்.
எல்லாம் மாறும்; நாம் காணவிரும்பும் சமநிலைச் சமுதாயம் அமைந்தே தீரும்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.