Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்கு ஒன்றிய சுற்றுக்குழல் அமைச்சகம் அனுமதி

தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்கு ஒன்றிய சுற்றுக்குழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. தருமபுரி தாலுகா அதகப்பாடி, நல்லம்பள்ளி தாலுகா தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைகிறது.  இதற்காக நில எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு மொத்தபரப்பு 1,724.566 ஏக்கர் நிலம் சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, தருமபுரி சிப்காட் தொழில் பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.14.08 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சிப்காட் தொழில் பூங்கா அமைக்க ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகம் சுற்றுச்சூழல் அனுமதி அளித்துள்ளது.462 கோடி ரூபாய் செலவில் அமைக்கபப்பட உள்ள இந்த சிப்காட் மூலம் 18,300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்காட்டில் உள்ள 100 சதவீத நிலத்தில் இரும்பு மற்றும் இரும்பு அல்லாத தொழில்கள் மற்றும் பெட்ரோல் கெமிக்கல் மற்றும் அது சார்ந்த தொழில்கள் வகையின் கீழ் மின்சார வாகனம் மற்றும் அதற்கான பேட்டரி உற்பத்தி நிறுவனங்களுக்கு 27.49 சதவீத நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சார வாகன பேட்டரி பிரிப்பான், பிற மின் வாகன பாகங்கள், ஆட்டோமொபைல் தொழில்களுக்கு 72.51% நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.