Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டெல்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறிப்பு

டெல்லி: மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா கடந்த 2024-ம் ஆண்டு முதல் மக்களவையில் உறுப்பினராக உள்ளார். தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவருவதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். டெல்லியில் தங்கும்போது எல்லாம் அருகில் உள்ள பகுதியில் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகும்.

இன்று காலை அவர் திமுக எம்.பி. சல்மாவுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். இரண்டுபேரும் செக் தூதரகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தான் அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்து சென்றதாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா புகார் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதி வெளிநாட்டு தூதரகங்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு நிறைந்தபகுதியாக உள்ளது. இந்தநிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் நகைபறிக்கபட்டுள்ளது பெரும் பேசுபொருளாக உள்ளது. இதுதொடர்பாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. சுதா புகார் அளித்திள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.