Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு வாகனம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு சிறுவன் கடத்தல் வழக்கு ஒரு உதாரணம் : உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை : திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் தேனியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், தனுஷின் சகோதரரான 17 வயது சிறுவனை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இது தெரியவந்ததும் கடத்தல்காரர்கள் சிறுவனை கீழே இறக்கி விட்டுத் தப்பினர். தொடர்ந்து, விசாரணை நடத்திய திருவலாங்காடு போலீசார், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக ஒரு பெண் உட்பட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வனராஜா, முன்னாள் உதவி ஆய்வாளர் மகேஸ்வரி, மணிகண்டன், கணேசன், வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, இந்த கடத்தல் சம்வபத்தில் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினரும், புரட்சி பாரதம் கட்சித் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்திக்கும் , ஏடிஜிபி ஜெயராமுக்கும் தொடர்பு உள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.இதையடுத்து, பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிய நிலையில், அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. அதே சமயத்தில், ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி கைதும் செய்யப்பட்டார். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், காவல் நிலைய ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த கடத்தல் வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "அரசு வாகனம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு சிறுவன் கடத்தல் வழக்கு ஒரு உதாரணம். கடத்தல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய போதும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் கைதான வனராஜ், மணிகண்டன், கணேசன் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்கிறோம், "இவ்வாறு தெரிவித்தனர்.