Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சென்னையைச் சேர்ந்த நபர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சென்னையைச் சேர்ந்த ரகுராம்(50) மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த ரகுராம் அடிக்கடி ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வரும் பழக்கம் உடையவர் ஆவார். கடந்த 29-ம் தேதி ரகுராம் சென்னையில் இருந்து நண்பர்கள் 15 பேருடன் புறப்பட்டு கோவை சென்றுள்ளார். வெள்ளியங்கிரிக்கு வந்து கிரிமலை ஏறுபதற்காக மலையறே தொடங்கியுள்ளார். 5-வது மலையில் ஏறிக்கொண்டிருக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்தியாவில் அமைந்துள்ள சைவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை. கைலாய மலையைப் போல வெள்ளியங்கிரி மலையிலும் ஆதிசிவன் சிலகாலம் தவநிலையில் இருந்ததால் இது ‘தென் கைலாயம்’ என்று போற்றப்படுகிறது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் ஒன்றாகும். கடல் மட்டத்தில் இருந்து 6000 அடி உயரத்தில் ஆறு மலைகள் கடந்து ஏழாவது மலையில் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கிரிவலம் வருவது வழக்கம்.

பூண்டி மலையடிவாரத்திலிருந்து தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி சென்றடைய முதல் மலை உச்சியில் இருக்கும் வெள்ளை விநாயகர் இரண்டாவது மலை பகுதியில் இருக்கும் கைதட்டி சுனை பாம்பாட்டி சித்தர் குகை மூன்றாவது மலையில் இருக்கும் வழுக்குப்பாறை, வாய் சோலை, ஒட்டர் சமாதி, ஆகியவற்றை கடந்து 5, 6 ஆகிய செங்குத்தான மலைகளை கடந்தால் விபூதி மலை ஆண்டி சுனை ஆகியவற்றில் பக்தர்கள் இளைப்பாறி ஏழாவது மலையில் பஞ்சலிங்க பூத சுயம்புலிங்கமாக இருக்கும் வெள்ளியங்கிரி தரிசிக்க சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று ஒரு லட்சம் பக்தர்கள் குவிவது வழக்கம். இந்த மலைகளை ஏறுவதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உடல் நலக் கோளாறுகள் மற்றும் மலைகளுக்கு மேலே நிலவும் கடுமையான குளிர் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக அவ்வப்போது உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் முதல் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளியங்கிரி மலை மீது ஏறிய ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சுப்பாராவ், சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன், தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சென்னையைச் சேர்ந்த ரகுராம்(50) மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த 29-ம் தேதி ரகுராம் சென்னையில் இருந்து நண்பர்கள் 15 பேருடன் புறப்பட்டு கோவை சென்றுள்ளார்.

வெள்ளியங்கிரிக்கு வந்து கிரிமலை ஏறுபதற்காக மலையறே தொடங்கியுள்ளார். 5-வது மலையில் ஏறிக்கொண்டிருக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்த ரகுராம் நீரிழிவு நோயாளி ஆவார். வெள்ளியங்கிரி மலை ஏறுபவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.