சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 'முதலமைச்சர் முழுமையாக குணமடைந்துவிட்டார். 3 நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் வழக்கமான பணிகளை தொடரலாம்' என அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேலும் "அப்பல்லோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலுவின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதலமைச்சர் இன்று மாலை இல்லம் திரும்ப உள்ளார்கள். முதலமைச்சர் நலமாக இருக்கின்றார்கள். மூன்று நாள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்" என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.