Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமண மண்டபம், ஓட்டல்களில் மிச்சமாகி வீணாகும் உணவுகளை சேமிக்கும் மையம் மாநிலம் முழுவதும் தொடங்க வேண்டும்

Food waste, Wedding halls*பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெங்களூரு : மாநிலத்தில் வீடு, ஓட்டல், திருமண மண்டபம், பொது இடங்களில் வீணாகும் உணவுகளை சேமிக்க மாநில அரசின் சார்பில் உணவு ேசமிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் உணவு கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். நமது நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் உணவு தானிய உற்பத்தி இருந்தாலும், குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு அவை கிடைக்காததால் பட்டினியால் சாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் சிறிய ஓட்டல் முதல் நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், கோயில் உள்பட பல இடங்களில் மக்கள் சாப்பிடு வதற்காக தயாரிக்கப்படும் உணவுகள் மிச்சமாகி வீணாக்கப்படுகிறது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நமது நாட்டில் ஓராண்டில் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான உணவுகள் வீணாகி வருவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் ஓராண்டில் வீணாகும் உணவுகளுடன் ஒப்பிடும்போது சீனா நாட்டில் ஓராண்டு உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்களுக்கு சமமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான், இத்தாலி உள்பட பல நாடுகளில் வீணாகும் உணவுகளை பதப்படுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படி பதப்படுத்தப்படும் உணவுகளை ஏழ்மையில் உள்ளவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் திட்டத்தை நமது நாட்டிலும் செயல்படுத்தும் நோக்கத்தில் உணவு வீணாவதை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் செய்வதுடன், கர்நாடக மாநிலம் தும்கூருவில் உணவு பதப்படுத்தல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்கள், மாநகரங்கள், இரண்டாவது, மூன்றாவது கட்ட நகரங்களிலும் தொடங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் 2025-26ம் நிதியாண்டு பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.