Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

சென்னை: வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. மோங்லாவிற்கு தெற்கில் 130 கிமீ, சாகர் தீவுக்கு 150 கிமீ, கொல்கத்தாவுக்கு 170 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து முற்பகல் வாக்கில் மேற்குவங்க - வங்கதேச கடல் பகுதியில் கரையை கடக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கம், அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா, ஜார்கண்ட் வழியே நகர கூடும்.