சென்னை: ஜூலை 25 முதல் நவம்பர் 1 வரை 100 நாட்கள் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைமை நிலையம் அறிவி த்துள்ளது. அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்கிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருந்து அன்புமணி சுற்றுப்பயணம் தொடங்குகிறது. அன்புமணியின் விரிவான பயணத்திட்டம் சில நாட்களில் வெளியிடப்படும். சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, அடிப்படை சேவைகளுக்கான உரிமை, கல்வி, நலவாழ்வுக்கான உரிமை,
மது மற்றும் போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய உரிமைகளை வென்றெடுப்பது தான் அன்புமணி மேற்கொள்ளவுள்ள பயணத்தின் நோக்கங்கள் ஆகும். தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஓர் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கானது. எனவே. உன்னத நோக்கம் கொண்ட இந்தப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்கும்படி அன்புடன் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று கேட்டுக் கொண்டார்.