புதுடெல்லி: பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் கடந்த 2017 முதல் 2019 வரை யெஸ் வங்கியில் ரூ.3,000 கோடி வரை கடன் பெற்று, அதை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
யெஸ் வங்கி மட்டுமின்றி மேலும் பல வங்கிகளில் பெற்ற பல கோடி ரூபாய் கடனை ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக கடந்த மாதம் 24ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தெர்டர்பாக அனில் அம்பானி நேரில் ஆஜராக நோட்டீஸ் தரப்பட்டது. இதன்படி, நேற்று காலை 10.50 மணிக்கு அனில் அம்பானி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடந்தது.