கொல்கத்தா: எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,\\”கடந்த ஆண்டு வங்கதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டபோது சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 10263 பேரை எல்லைப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். எல்லைப்பாதுகாப்பில் எல்லைப்பாதுகாப்பு படையினரின் உயர்ந்த தொழில்முறையை இது வெளிப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைவது தடுக்கப்பட்டது. எல்லைப்பாதுகாப்பு படையினர் ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதை இந்த தடுப்புக்காவல்கள் பிரதிபலிக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
+
Advertisement

