டேராடூன்: வங்கதேசத்தின் மெஹர்பூரில் வசிக்கும் ஹசனும், உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள தியூனி தெஹ்ஸில் வசிக்கும் ரீனாவும் 2019ம் ஆண்டு பேஸ்புக் மூலமாக அறிமுகமாகி உள்ளனர். 2022ம் ஆண்டு ஹசன் சட்டவிரோதமாக எல்லையை கடந்து ரீனாவை தன்னுடன் வங்கதேசத்திற்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகின்றது. அதே ஆண்டு அவர்கள் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்து டேராடூனை அடைந்துள்ளனர். அங்கு ரீனாவின் முன்னாள் கணவர் சச்சின் சவுகானின் அடையாளத்தின் ஆதார், பான்கார்டு மற்றும் பிற ஆவணங்களை பெற்று கணவன்-மனைவியாக வசித்து வந்துள்ளனர். திருமணத்துக்கு முன் ரீனாவை முஸ்லிமாக மதம் மாற்றியதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஹசனும், ரீனாவும் வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர். மதம் மாற்றி திருமணம் செய்ததற்காக ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement



