புதுடெல்லி: வங்கதேச பெண்களை இந்தியாவிற்குள் கடத்தி வரும் கும்பல்களை ஓழிப்பதற்காக தேசிய புலனாய்வு அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள்.மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா, பங்கானில் 5 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அமீர் அலி ஷேக் மற்றும் அமல் கிருஷ்ணா மொண்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். வங்கதேசத்தை சேர்ந்த சிறுமியை, வேலை தருவதாக கூறி சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கடத்தி வந்து, சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனியன்று நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான இந்தியா, வங்கதேசம் உட்பட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
+
Advertisement