Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கை மண்ணில் முதன்முறையாக டி.20 தொடரை கைப்பற்றிய வங்கதேசம்

கொழும்பு: வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. இதில் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0, 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் இலங்கை, 2வது போட்டியில் வங்கதேசம் வென்ற நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 46, துசன் ஷனகா 35 ரன் அடித்தனர். வங்கதேச பவுலிங்கில் மஹேதி ஹசன் 4 விக்கெட் எடுத்தார்.

பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணியில் பர்வேஸ் ஹொசைன் எமோன் டக்அவுட் ஆக கேப்டன் லிட்டன்தாஸ் 32 ரன் அடித்தார். டான்சித் ஹசன் 47 பந்தில் 73, டோஹித் ஹிரிடோய் 27 ரன் அடித்தனர். 16.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 133 ரன் எடுத்த வங்கதேசம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என தொடரை கைப்பற்றியது. முதன்முறையாக இலங்கையில் தொடரை வென்றுள்ளது. மஹேதி ஹசன் ஆட்டநாயகன் விருதும், லிட்டன் தாஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.