டாக்கா: வங்க தேசத்தில் கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்களின் போது பயங்கர கலவரம் ஏற்பட்டது. போராட்டத்தை ஒடுக்க முடியாததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதை தொடர்ந்து அரசின் இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் இடைக்கால அரசை விமர்சித்து வருபவர்களை அரசு கைது செய்து வருகிறது. அரசை பற்றி சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த அபு ஆலம் ஷாகீத் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அபு ஆலம் உள்ளிட்ட 6 பேர் தெருக்களில் போராட்டங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். வங்க தேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றுள்ள அபு ஆலம் கான் அரசு செயலாளராக பணியாற்றியுள்ளார்.