டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சரக்கு வளாகத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ரசாயனங்களிலும் தீ பற்றியதால் வானுயர புகை கிளம்பியது.
உடனடியாக 35க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்து காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்தது. பல விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.