டாக்கா: வங்கதேசத்தின் மிர்பூரில் உள்ள இடைக்கால தலைவரான முகமது யூனுஸின் கிராமீன் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் திடீரென குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். மேலும் தலைநகர் டாக்காவில் இரண்டு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது.
மேலும் கிராமீன் வங்கி ஆலோசகர் பரிதா அக்தருக்கு சொந்தமான வணிக நிலையத்துக்கு எதிரேயும் மர்மநபர்கள் திடீரென குண்டுகளை வீசினார்கள். இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.

