பெங்களூருவில் பிரபலமான உயர் திறனாளர்கள் மையங்கள் அமைக்கும் ANSR Global நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!
பெங்களூரு: பெங்களூருவில் பிரபலமான உயர் திறனாளர்கள் மையங்கள் அமைக்கும் ANSR Global நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பெங்களூருவில் உயர் திறனாளர்கள் மையங்கள் அமைக்கும் நிறுவனங்கள் மாநாடு நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம், நிதி, ஆராய்ச்சி மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்த மையம். 200க்கும் மேற்பட்ட திறனாளர்கள் மையங்களை உருவாக்கியுள்ள ANSR Global நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.10,000 உயர்மதிப்பு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிவிட்டுள்ளார்.


