Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஜாஜ் டோமினார்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட டோமினார் 250 மற்றும் டோமினார் 400 மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் புதிய அம்சங்களாக ரைடு - பை - வயர் தொழில்நுட்பம், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெற்றுள்ளன.

டோமினார் 250 மோட்டார் சைக்கிளில் 249 சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 25 பிஎச்பி பவரையும், 23.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.1.91 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், கேன்யான் ரெட், ஸ்பார்க்ளிங் பிளாக் மற்றும் சிட்ரஸ் ரஷ் என 3 வண்ணங்கள் உள்ளன.

டோமினார் 400ல் 373 சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 38 பிஎச்பி பவரையும் 35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இது, கேன்யான் ரெட், கார்கோல் பிளாக் மற்றும் அரோரா கிரீன் ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கும். இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.2.38 லட்சம்.