நியூயார்க்: ஒன்றிய வெளியுறவு அமைச்சர் கனடாவில் நடந்த ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவில் நியூயார்க்கில் ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்து பேசினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் பின் ரஷீத் அல் சயானியுடன் தொலைபேசியில் அவர் பேசினார். அப்போது, பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
+
Advertisement


