பக்ரைனில் இருந்து சென்னை வந்த கல்ப் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு: அவசரமாக மும்பையில் தரை இறங்கியது
சென்னை: பக்ரைனில் இருந்து, சென்னைக்கு கல்ப் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு பக்ரைனியில் இருந்து 187 பயணிகளுடன் புறப்பட்டு, சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம், அதிகாலை 4.45 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்க வேண்டும். இந்நிலையில் இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவருக்கு, திடீர் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விமானி விமானத்தை அவசரமாக மும்பை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தரை இறங்கினார். அதன் பின்பு, பயணியை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பின்பு, கல்ப் ஏர்வேஸ் விமானம், 186 பயணிகளுடன் நேற்று காலை 5.30 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தது.

