டோக்கியோ: ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் நேற்று, ஜப்பானை சேர்ந்த உலகின் 13ம் நிலை வீரர் கென்டா நிஷிமோடோ உடன் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் மோதினார். போட்டியின் துவக்கத்தில் சிறப்பாக ஆடிய நிஷிமோடோ முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார்.
2வது செட்டில் சுதாரித்து ஆடிய சென், 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். இருப்பினும் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் அற்புதமாக ஆடிய நிஷிமோடோ, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தி 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடி இறுதிக்கு முன்னேறினார்.


