சென்னை: வாராக்கடன் என அறிவித்த பிறகும் வசூல் நடவடிக்கை தொடரும் என்ற அறிவிப்பு குறித்து சு.வெங்கடேசன் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார். 'தீய்ந்துபோன டயலாக்கை எத்தனை முறை பேசுவீர்கள். 2014ம் ஆண்டில் இருந்து பெயர், தொகையோடு கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும். மக்கள் சேமிப்பு எவ்வாறு சூறையாடப்படுகிறது என்று தேசம் பார்க்கட்டும். கால் கிணறு கூட தாண்டவில்லை உங்கள் வசூல் வேட்டை; 5 ஆண்டுகளில் வாராக்கடன் வசூல் ரூ.4.16 லட்சம் கோடி. வாராக்கடனில் வசூல் செய்யப்படாத தொகை ரூ.13,98,155 கோடி' என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
+
Advertisement