மோசமான ஆட்சி நிர்வாகம் காரணமாகதான் அண்டை நாடுகளில் ஆட்சி கவிழ்ந்தது: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சு
டெல்லி: வங்கதேசம், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் மோசமான ஆட்சி நிர்வாகம் இருந்ததால்தான் ஆட்சி மாற்றங்கள் நடந்ததாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். ஒரு நாட்டை கட்டியெழுப்பும் செயல்பாட்டிலும், பாதுகாப்பதிலும், அதன் இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடையவும் ஆட்சி நிர்வாகம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
