சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்களும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,140 இடங்கள் என 21 கல்வியியல் கல்லூரிகளில் 2,040 இடங்களும் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 20ம் தேதி முதல் ஜூலை 21ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
559 மாணவர் 2,986 மாணவியர் என மொத்தம் 3,545 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. விருப்பக் கல்லூரியை தேர்வு செய்ய கடந்த 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை 10 மணியில் இருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு (ஐடி) மூலம் www.lwiase.ac.in