ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றார். தெலங்கானா பேரவையில் தற்போது 119 பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் தற்போது 15 அமைச்சர்கள் உள்ளனர். மேலும், 3 அமைச்சர்களுக்கான பதவி காலியாக உள்ளது. ஆனால் ஏற்கனவே உள்ள அமைச்சர்களில் முஸ்லிம் சிறுபான்மையினர் யாரும் இல்லை. இந்நிலையில் தெலங்கானா அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் இன்று பதவி ஏற்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வௌியானது. ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த சூழலில் சிறுபான்மையினத்தை சேர்ந்த முகமது அசாருதீன் அமைச்சராக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தேர்தல் நடத்தை விதி மீறல்” என குற்றம்சாட்டி தேர்தல் ஆணையத்திடம் பாஜ புகார் செய்து உள்ளது.
+
Advertisement 
 
  
  
  
   
