Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணிகள்

ஒன்றிய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ரிசர்ச் ஆபீசர் உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. ரிசர்ச் ஆபீசர் (குரூப்-ஏ):

i) பேத்தாலஜி: 1 இடம் (பொது). வயது: 40க்குள். சம்பளம்: ரூ.15,600- ரூ.39,100. தகுதி: பேத்தாலஜி பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஸ்டேட் மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

ii) ஆயுர்வேதா: 15 இடங்கள் (பொது-5, ஒபிசி-6, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 40க்குள். சம்பளம்: ரூ.15,000- ரூ.39,100. தகுதி: ஆயுர்வேதா பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் ஸ்டேட் ஆயுர்வேதா கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

2. அசிஸ்டென்ட் ரிசர்ச் ஆபீசர் (பார்மகோலஜி) குரூப்- பி: 4 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800. தகுதி: பார்மகோலஜியில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.

3. ஸ்டாப் நர்ஸ் குரூப் பி : 14 இடங்கள். (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்டி-1, எஸ்சி-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800. தகுதி: நர்சிங் பிரிவில் பட்டப்படிப்பு/டிப்ளமோ தேர்ச்சியுடன் ஸ்டேட் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. அசிஸ்டென்ட் குரூப் ‘பி’: 13 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

5. லோயர் டிவிசன் கிளார்க் குரூப் ‘சி’: 37 இடங்கள் (பொது-14, ஒபிசி-9, எஸ்சி-7, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-4). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் 35 வார்த்தைகள், இந்தி 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

6. பார்மசிஸ்ட்- குரூப் சி: 12 இடங்கள் (ெபாது-5, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200. தகுதி: பார்மசி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.

7. ஆப்செட் மிஷின் ஆபரேட்டர் குருப் ‘சி’: 1 இடம். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் மற்றும் மிஷின் மெயின்டெனன்சில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

8. லைபரரி கிளார்க் குருப் ‘‘சி’’: 1 இடம் (பொது). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200. தகுதி: லைபரரி சயின்சில் சான்றிதழ் மற்றும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

9. ஜூனியர் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜிஸ்ட் குருப் சி: 1 இடம் (எஸ்சி). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.29,200-ரூ.92,100. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிஎம்எல்டி தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: குரூப் ஏ பணிக்கு ரூ.1,000, குரூப் பி பணிக்கு ரூ.500, குரூப் சி பணிக்கு ரூ.200. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பொருளாதார பிற்பட்டோர்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது. www.ccras.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2025.