அயோத்தி: அயோத்தி நகராட்சிக்குள் சுமார் ரூ.200 கோடி ஊழல் நடந்ததாக உபி தணிக்கை குழு அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான அயோத்தி பிரிவின் உள்ளூர் நிதி தணிக்கைத் துறை அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் அயோத்தி நகராட்சிக்குள் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக அரசுக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மானியங்களை தவறாகப் பயன்படுத்துதல், பட்ஜெட்டை தவறாகப் பயன்படுத்துதல் , பல்வேறு துறைகளில் ஒழுங்கற்ற பணம் செலுத்துதல், இதில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்பட்டது ஆகியவை இடம் பெற்றுள்ளது.
+
Advertisement