அயோத்தி ராமர் கோயிலில் வரும் 25ம் தேதி கொடியேற்றும் விழாவை முன்னிட்டு விஐபிக்களுக்காக 60 விமானங்கள் தயார்
உத்தரப்பிரதேசம்: அயோத்தி ராமர் கோயிலில் வரும் 25ம் தேதி கொடியேற்றும் விழாவை முன்னிட்டு விஐபிக்களுக்காக 60 விமானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்களின் வசதிக்காக விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு அயோத்தியில் உள்ள தங்கும் விடுதிகளில் 1600 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்றும் விழா நவம்பர் 25, 2025 அன்று, விவாக பஞ்சமி விழாவோடு இணைந்து நடைபெறும். இந்த விழாவில் சுமார் 10,000 விருந்தினர்கள் பங்கேற்பார்கள், மேலும் பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்துகொண்டு கொடியேற்றி வைப்பார்கள்
இந்த விழாக்கான ஏற்பாடுகள் குறித்து, கோயில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 25 ஆம் தேதி காலை 11.45 முதல் மதியம் 12.15 மணி வரையில் கொடி வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெறும் என்றும், வளாகத்தில் உள்ள 20 கோயில்களிலும் கொடிகள் ஏற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பொது மக்கள், 3,000 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்ததாகவும், கோவில் கட்டுமான பணிகள், 1,800 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், 1,500 கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும். நவம்பர் 25 ஆம் தேதி நடக்கும் கொடியேற்ற நிகழ்வில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடிமரத்தில் கொடியேற்றுவார் என்றும் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டுமான பணிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர் என்றும், இதில், 8,000 பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று தகவல் தெரிவித்துள்ளனர்


