Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்!

சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம். அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, ( Govt.Polytechnic College) மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் நேற்று (07.08.2025) தண்டையார்பேட்டை, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் அதிகாரிகள் மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து மாணவர்களுக்கு தகவல் ஏதேனும் கிடைக்கப்பெற்றால். உடனடியாக காவல்துறையினரிடமோ, கல்லூரி பேராசிரியர்களிடமோ தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இரகசியம் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர், துணை முதல்வர் அவர்களின் சீரிய தலைமையில் சுமார் 400 மாணவ, மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், போதை பொருட்களுக்கு எதிரான இளைஞர் குழு உறுப்பினர்கள் பேரார்வத்தோடு பங்கேற்றனர். மாணவர்களிடம் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளையும், சமுகத்தில் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பயன்பாடுகளை தவிர்ப்பது குறித்தும் விளக்கமளித்து, மாணவ மாணவியர்கள் வருங்காலத்தில் போதை பொருட்கள் இல்லாத சமுகத்திற்கு பிரிதிநிதியாக மாறுவதற்கு காவல் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட மாணவ மாணவிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ‘‘SAY NO TO DRUGS‘‘ என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.