Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் சதுப்பு நிலக்காடுகள் பாதுகாப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மன்னார்குடி : பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் உலக சதுப்பு நில காடுகள் தின நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் சக்கர பாணி தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது. மாவட்ட ஆணையர் மீனாட்சி, திரி சாரண படைத்தலைவர் ரமேஷ், மாவட்ட அமைப்பு ஆணையர்கள் செந்தில்குமார், லதா முன்னிலை வகித்தனர். திரி சாரணபடை தலைவர் பழனிவேல் வரவேற்றார்.

இதில், மாவட்ட பொருளாளரும் திரி சாரண படைத்தலைவருமான சங்கர் பேசுகையில், சதுப்பு நிலக் காடுகள் புயல், வெள்ளம், மண் அரிப்பு, கடல் நீர் வெள்ளப் பெருக்கு போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாத்து வருகிறது.

இதன் காரணமாக ஆண்டுதோறும் ஜூலை 26-ம் நாளை யுனெஸ்கோ அமைப்புஉலக சதுப்பு நிலக் காடுகள் தினமாக கடைப்பிடித்து வருகிறது. தனித்த சிறப்புமிக்க சதுப்பு நிலக் காடுகளைப் பாதிப்பிலிருந்து மீட்கவும், அதன் நிலையான வளர்ச்சிக்கான தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் நோக்கமாகும்.

நம் நாட்டில் உள்ள சதுப்பு நிலக் காடுகளில் மட்டும் சுமார் நான்காயிரத்து க்கும் மேற்பட்ட வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பதுடன், கடல் உணவு உற்பத்திக்கு இந்த காடுகள் உறுதுணையாக இருக்கின்றன.

இக்காடுகளில் இருந்து கிடைக்கும் மீன், இறால், நண்டு, ஆளி போன்றவை சிறு தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. இத்தகைய உயிரினங்களின் குஞ்சுகள் உயிர் வாழ உணவும் உறைவிட மும் தந்து பெருமளவு உதவுகின்றன. இக்காடுகள் இல்லையெனில் இறால் வளம் முற்றிலுமாக அழிந்து போகும்.

இத்தகைய சூழலில் மக்கள் தொகை பெருக்கத்தினாலும், அதிகபட்ச பயன் பாட்டினாலும் சதுப்பு நிலக் காடுகள் நாளுக்கு நாள் அழிந்து வருவது வேத னை தருவதாக உள்ளது. அழிவுகளில் இருந்து சதுப்பு நிலக் காடுகளை காக்க வே `உலக சதுப்பு நிலக் காடுகள் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, மனித மற்றும் வன உயிரின சமுதாயத்தைக் காக்க உதவும் சதுப்பு நிலக் காடுகளைக் காக்கும் பணியில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும் என்றார். முடிவில், திரி சாரணர் படை தலைவர் டிக்ஸன் நன்றி கூறினார்.