சென்னை அருகே ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூீனியர் மேனேஜர் (இன்டகரேட்டட் மெட்டீரியல் மேனேஜ்மென்ட்): 20 இடங்கள் (பொது-10, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.30,000. வயது: 11.10.2025 தேதியின்படி 30க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
கட்டணம்: ரூ.300/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை, மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.avnl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.10.2025.