ஆவடி: புதிய பேருந்து முனைய கட்டுமானப் பணி நடைபெறுவதால் ஆவடி பேருந்து முனையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. MTH சாலையில் 100 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்துக்கு பேருந்து முனையம் இடமாற்றம் செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடியும் வரை தற்காலிக பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். தற்காலிக பேருந்து முனையத்தில் மாதாந்திர பயணச்சீட்டு தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
+
Advertisement