கரூர்: இரவிலும் பிரேத பரிசோதனை செய்யலாம் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று விதிமுறைகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பபடுகிறது. கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும் என வலைதளங்களில் செய்தி பரவுகிறது. 2021 நவ.15ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலக குறிப்புரையில் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement