புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இந்தியாவில் பயிற்சி பெற்ற மனிதவளம் இருப்பதால் இந்திய ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது.
உலகின் அனைத்து பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் உள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை உலகின் முதலிடத்துக்கு கொண்டு செல்வதே அரசின் இலக்கு. இது கடினம் என்றாலும், சாத்தியமானது” என்று இவ்வாறு தெரிவித்தார்.