சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே ஒருநாள் போட்டி தொடர் முடிந்ததும் 5 போட்டி கொண்ட டி.20 தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி வரும் 29ம் தேதி கான்பெராவில் நடைபெற உள்ளது. இதனிடையே டி.20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள மேக்ஸ்வெல் கடைசி 3 போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளார். அணி விபரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட் (முதல் 3 போட்டி), சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன் (கடைசி 3 போட்டி), டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ் (கடைசி 2 போட்டி), நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட் (முதல் 2 போட்டி), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (வி.கீ), மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப் (வி.கீ), மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல்(கடைசி 3 போட்டி) ஆடம் ஜாம்பா.
இதனிடையே இந்திய டி.20 அணியில் இடம்பிடித்துள்ள கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், பும்ரா, அபிஷேக் சர்மா, ரிங்குசிங், திலக் வர்மா, வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நேற்று ஆஸ்திரேலியா சென்றடைந்தனர்.
