வாஷிங்டன் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் (26), ஸ்பெயின் வீரர் அலெஜான்ட்ரா டேவிடோவிச் ஃபோகினா (26) மோதினர். இருவரும் விட்டுக் கொடுக்காமல் மோதியதால் முதல் செட்டை டேவிடோவிச் 7-5 என்ற செட் கணக்கிலும், 2வது செட்டை டிமினார் 6-1 என்ற செட் கணக்கிலும் கைப்பற்றினர். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட், டை பிரேக்கர் வரை சென்றது. கடைசியில் 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை டிமினார் வசப்படுத்தினார். அதன் மூலம் போட்டியில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
+
Advertisement