மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 16வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்த வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் தடை அமலுக்கு வருகிறது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் சிறுவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது. அதில், தங்களது தரவுகளை பதிவிறக்கம் செய்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரட்ஸ் தளங்களில் இருந்து வெளியேறுமாறு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாக எச்சரித்துள்ளது.
+
Advertisement


