Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த இன்று முதல் தடை..!

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று அமலுக்கு வந்தது. 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதித்தது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தை கொடுக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில்; பேஸ்புக், இன்ஸ்டராகிராம், யுடியூப், டிக்டாக்' போன்ற சமூக வலைதளங்கள் உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமூக வலைதளங்களால் சிறுவர் - சிறுமியர் சீரழியும் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஸ்நாப்சாட், எக்ஸ், ரெடிட், ட்விட்ச், கிக், த்ரெட்ஸ் ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடைவிதித்த, உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறி உள்ளது.

இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மன அமைதியை உருவாக்கும். இது அவர்கள் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது. ஆஸ்திரேலியா முழுவதும், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் இல்லாமல் தங்கள் நாளை சற்று வித்தியாசமாகத் தொடங்குகிறார்கள். இது ஒரு பெரிய மாற்றம். இது உண்மையில் முக்கியமானது. இன்றைய மாற்றம் உங்கள் குழந்தைகளை சமூக வலைதளத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

ஆஸ்திரேலிய குடும்பங்கள் குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதற்கான உரிமையையும், பெற்றோர்கள் அதிக மன அமைதியைப் பெறுவதையும் வலியுறுத்தும் நாள் இது. இன்றைய நாள் பெருமை வாய்ந்தது. மீறி அவர்களுக்கு கணக்கு உருவாக்க அனுமதித்தால், தொடர்புடைய நிறுவனங்களுக்கு ரூ.296 கோடி அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அந்தோணி அல்பானீஸ் கூறியுள்ளார்.