Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. பிரிஸ்பேனில் இன்று நடைபெறவிருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நிலையில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. 4.5 ஓவர்களுக்கு இந்தியா 52 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பிரிஸ்பேன் நகரில் இன்று நடைபெற்றது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஒரு போட்டி டிரா ஆன நிலையில் கடைசியாக முடிந்த 3 போட்டிகளில் 2ல் வென்றுள்ள இந்தியா, 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், கடைசி போட்டி இன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது. .

கடந்த 17 ஆண்டுகளாக ஆஸி மண்ணில் டி20 போட்டித் தொடர்களை இழக்காத பெருமை இந்திய அணிக்கு உண்டு. அந்த பெருமையை தற்போதைய தொடரிலும் இந்திய அணி தக்க வைத்துள்ளது.இன்றைய போட்டியில் சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் அதிரடி காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. முந்தைய போட்டியில், கணிக்க முடியாத கராரா மைதானத்தில் ஆடிய இந்திய அணி சூழ்நிலையை சிறப்பாக எதிர்கொண்டு, முதல் 3 விக்கெட்டுகள் இழக்கும் முன் 121 ரன்களை குவித்தது. அதன் பின், 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் பறிபோயின. இருப்பினும், பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு ஆஸியை, 119 ரன்களில் சுருட்டி இந்தியா வெற்றி வாகை சூடியது. கடைசி இரு போட்டிகளில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா சிறப்பாக ஆடவில்லை.

பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் தனது திறமையை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பந்து வீச்சு மெச்சத்தக்கதாக காணப்படுகிறது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை, 4வது டி20 போட்டி, தரமான சுழல் பந்து வீச்சுக்கு எதிரான அவர்களின் பலவீனத்தை தோலுரித்துக் காட்டியது.

அந்த அணியின் பேட்டிங் வலிமை, கேப்டன் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட் ஆகியோரை பெரிதும் நம்பி உள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்ற முனையும். மாறாக, ஆஸி, போட்டியில் வென்று, தொடரை சமன் செய்ய போராடியது. ஆனால் தற்போது 1 ஒரு மணி நேரமாக மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. தற்போது 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.