மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டு, கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த தடை சட்டத்தை அமலுக்கு கொண்டு வர ஊடக நிறுவனங்கள் தங்களை தயார் செய்து கொள்ள அவகாசமும் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிவுக்கு வந்ததையடுத்து, 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வௌியிட்ட வீடியோ செய்தியில், “இந்த சீர்திருத்தம் நம் வாழ்க்கையை மாற்றும். குறிப்பாக ஆஸ்திரேலிய குழந்தைகளின் குழந்தை பருவத்தை மட்டுமே அனுமதிக்கும் ” என்றார்.
+
Advertisement


