மேக்கே: இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இளம் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா வென்ற நிலையில், ஆஸி அணியுடன் நேற்று 2வது 4 நாள் டெஸ்ட் போட்டியில் ஆடியது.
முதல் இன்னிங்சை துவக்கிய இளம் ஆஸி அணி, 43.3 ஓவரில் 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழந்து, 144 ரன் எடுத்திருந்தது. ஹெனில் படேல் 22, தீபேஷ் தேவேந்திரன் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர உள்ளது.