Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆஸி ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஸ்ரேயாஸ் தலைமையில் இந்திய ஏ அணி அறிவிப்பு

மும்பை: ஆஸி ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக ஸ்ரேயாஸ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், 2வது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்திய ‘ஏ’ அணிஅணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகியதால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்தியா ஏ அணியை பிசிசிஐ அறிவித்தது. ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதலாவது ஒரு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுதிர் சிங், ரவி பிஷ்னாய், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, சினுர்ஜீத் சிங்.

* 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ப்ரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யான்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகாம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், துதிஷ்னோ சிங், துதிஷ்னோ சிங், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்.

* டெஸ்டில் ஸ்ரேயாஸ் 6 மாதம் ஓய்வு

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அணி தலைமையில் விளையாடியது. இந்நிலையில், 2வது டெஸ்டில் இருந்து ஸ்ரேயாஸ் விலகினார். முதுகு வலி காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து நிலையில், டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதல்தர போட்டிகளில் விளையாடும் போது, அசௌகரியமாக உணர்ந்துள்ளார். இதனால் டெஸ்ட் மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்து, தனக்கு 6 மாதம் ஓய்வு தேவை என பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டார். அவரது வேண்டுகோளை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது.