லக்னோ: இந்தியா வந்துள்ள ஆஸி ஏ அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது போட்டி லக்னோவில் கடந்த 23ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஏ 420 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பின் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா ஏ 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஏ அணி, 185 ரன்னில் ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி 85 ரன் எடுத்தார். இதையடுத்து 412 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய ஏ அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன் இந்திய ஏ அணி எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 74 எடுத்து காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். சாய் சுதர்சன் 44 ரன்னுடன் களத்தில் உள்ளார். இன்னும் 243 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை இன்று இந்தியா ஏ ஆட உள்ளது.