புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று, 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடவுள்ளது. அக்.19ம் தேதி, பெர்த் நகரிலும், 23ம் தேதி அடிலெய்டிலும், 25ம் தேதி சிட்னியிலும் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து, அக். 29 முதல் நவ. 8ம் தேதி வரை, 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. அந்த அறிவிப்பின்படி, ஆஸியுடன் நடக்கும் 3 ஒரு நாள் போட்டிகளுக்கும், இந்திய டெஸ்ட் அணிக்கு தற்போது கேப்டனாக உள்ள சுப்மன் கில் கேப்டன் தலைமை ஏற்பார். ஆஸியில் நடைபெறும் 5 டி20 போட்டிகளுக்கு, சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்படுவர்.
* ஓடிஐ களத்தில் யார், யார்?
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), அக்சர் படேல், கே.எல்.ராகுல் (விக்கெட் கீ்பபர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
* டி20யில் ஆடும் இந்திய வீரர்கள்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் தூபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.